திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குட் நியூஸ்... நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய உள்ளதால் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை பொறுத்தவரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக அதிக கன மழை காரணமாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாக அம்மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.