காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
16 மாவட்டங்களில் வெளுத்துவாங்க காத்திருக்கும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தமிழகம் முழுவதிலும் உள்ள 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து ஒரு வாரமாகவே இரவு நேரங்களில் கனமழையானது கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று (ஆகஸ்ட் 30) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.