திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: கடலோர மற்றும் மேற்குதொடர் மலை மாவட்டங்களில், அடுத்த 3 மணிநேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை..!
தமிழகத்தில் நவம்பர் 04ம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்காலிக முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன.
அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை முதல் மிககனமழை வரை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.