பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
கனமழை எச்சரிக்கை.! குமரி மாவட்டத்தில் தயார் நிலையில் இருக்கும் தீயணைப்பு படையினர்!!
தமிழகத்தில் நாளை(19.05.2024) மற்றும் நாளை மறுநாள்(20.05.2024) பல்வேறு மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் மழை வெள்ளத்தில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரம்மியமாய் காட்சிதந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளம்; மழையின் போது காணக்கிடைக்காத காட்சி உள்ளே.!
தயார் நிலையில் மீட்பு உபகரணங்கள்
இந்த நிலையில் நாகர்கோயிலில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்தில் அனைத்து மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஆய்வு செய்துள்ளார். பின்னர் பேசிய அவர், மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மக்களும் பாதுகாப்பாக இருக்க வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பெய்யப்போகும் பேய்மழை; மஞ்சள் & ஆரஞ்சு எச்சரிக்கை..!