மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JUSTIN: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், அரியலூர், திருவாரூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
தற்போது பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையானது பெய்துவருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, நாகை மாவட்டத்தில் மட்டும் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.