மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனிமேல் சென்னையில் பெண்களுக்கு பயமில்லை!. ரயில் நிலையத்தில் சேவையை தொடங்கும் பெண்கள்!.
சென்னையில் மெட்ரோ ரெயிலை பெண் ஓட்டுநர் இயக்கி பெருமைப்படுத்தி வரும் நிலையில். ரயில் நிலையத்தை முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பையும் பெண்களுக்கே கொடுத்துள்ளார்கள்.
சென்னையில் 26 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஆண், பெண் ஊழியர்கள் கலந்து பணியாற்றுகிறார்கள். அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்பினை செய்து வருகிறார்கள். இந்த சேவையை வெளிநாட்டவரும் விமர்சித்துவருகின்றனர்.
இந்த சேவையில் பெண்களுக்கு முன்னுரிமை அதிகம் கொடுக்கப்பட்டுள்ளதால் பயணிக்கும் பெண்களும் பயமில்லாமல் சென்றுவருவதாக பயணிகள் கூறுகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலைய பணிகள் முழுமைக்கும் பெண் ஊழியர்களை மட்டுமே ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளார்கள். இதனால் பெண்கள் மத்தியில் மெட்ரோ ரயில் இயக்கம் விமர்சிக்கப்பட்டுவருகிறது.
ரயில் நிலையத்தில் அறிவிப்பு செய்தல், டிக்கெட் கொடுத்தல், கண்காணித்தல், பயணிகளை பரிசோதனை செய்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பெண் ஊழியர் களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்தில் பெண்கள் மட்டுமே முழுமையாக நிர்வகிக்கக் கூடிய நிலையமாக அவை மாற்றப்பட உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் கூறும்போது "பொதுவாக அறிவிப்பு செய்தல், டிக்கெட் கொடுத்தல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் மட்டுமே பெண் ஊழியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள்"
இனி அனைத்து பொறுப்பையும் நிர்வகிக்கும் வகையில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, கோயம்பேடு ரயில் நிலையத்தை பெண்களே முழுமையாக நடத்துவார்கள்.அந்த நிலையங்களில் ஆண் ஊழியர்கள் பணியில் ஈடுபடமாட்டார்கள். எல்லா வேலைகளையும் பெண்களே கவனித்து நிர்வகிப் பார்கள். பெண்கள் மிகவும் திறமையோடு பொறுப்புகளை உணர்ந்து செயல்படுகிறார்கள்.
அதனால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பினை கொடுக்கிறோம். எந்த பணியை கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற பெண் களால் மெட்ரோ ரயில் நிலையத்தை நிர்வகிப்பது பெரிய சுமை அல்ல.
ஆனாலும் பெண் ஊழியர்களிடமோ, பயணிகளிடமோ பாலியல் தொந்தரவு நடைபெறாமல் தடுக்க சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதுவரையில் அது போன்ற பிரச்சனை எதுவும் இல்லை என்றனர்.