மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்மை குறைவு பிரச்சனையை மறைத்து திருமணம் செய்துவைத்த குடும்பம்!. இறுதியில் நேர்ந்த கொடூரம்!.
திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாதுஷா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஹசினாபேகம் என்ற பெண்ணுக்கும் ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். பின்னர் பாதுஷாவுக்கு ஆண்மைகுறைவு பிரச்சனை இருப்பதும், அதை மறைத்து அவர் தன்னை திருமணம் செய்ததும் ஹசினாவுக்கு தெரியவந்தது.
இதனால் விரக்தியடைந்த ஹசினா இது குறித்து கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து பாதுஷாவும், அவர் குடும்பத்தாரும் ஹசினாவை மோசமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அவர்கள் படுத்திய கொடுமை தாங்காமல், அவர் இது பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் பாதுஷா, அவர் தந்தை சையத் கான், தாய் சைபூன், சகோதரி ஜெசிமா பேகம் ஆகியோர் மீது புகார் கொடுத்தனர்.
இதனையறிந்த அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தேடி வருகிறார்கள்.