பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
தமிழக அரசை அடுக்கடுக்கான கேள்விகளால் அலறவிட்டு, உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு !
கடந்த ஆண்டு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து,நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எ.ம்ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த வளைவு அமைக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மேலும் மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படிஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டுள்ளதாகவும், சாலை மேம்பாட்டை தவிர அப்பகுதியில் எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதையும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எம்.ஜி.ஆர் வளைவை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் எம்ஜிஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு அமைத்துள்ளதாகவும், அதை திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இடதுணையா தொடர்ந்து எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு கட்டியதை தவிர வேறென்ன செய்தீர்கள்? அவரின் கொள்கை, கருத்துகளை பரப்ப என்ன செய்தீர்கள்?*காது கேளாதோர், பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கொள்கையை அரசு பின்பற்றியதா? இதுபோன்ற திட்டங்களை உருவாக்கிவாருங்கள் என்று கூறினர்.
பின்னால் விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க அனுமதி அளித்தனர். மேலும் இந்த வழக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.