மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பணிப்பெண் செய்த காரியம்.. அம்பலப்படுத்திய உரிமையாளர்!
கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இவர்கள் இருவரும் ஆயுர்வேத மருத்துவர்களாக உள்ளனர். இவர்கள் வீட்டில் வேலைக்காக சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி என்ற 37 வயது பெண்ணை பணியமர்த்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களது வீட்டில் அடிக்கடி பணம் மற்றும் நகைகள் திருடு போய் உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முப்பதாயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் பணிப்பெண் பாரதியின் மீது சந்தேகம் கொண்ட அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
கோவை அருகே பணத்தையும் நகையையும் திருடிய பணிப்பெண்; மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்த வீட்டு உரிமையாளர்கள்; வீடியோ காட்சிகள்#Kovai pic.twitter.com/vyDvW11mLi
— Indian Express Tamil (@IeTamil) February 20, 2024
இந்த நிலையில் முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி வெளியில் சொல்வது போல் புறப்பட்டு படுக்கை அறையில் எதிரே உள்ள சிலாப்பில் ஏறி மறைந்து இருந்துள்ளனர். இதனையடுத்து அங்கே வந்த பணிப்பெண் பாரதி பீரோவில் இருந்த 10 கிராம் நகை மற்றும் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.
இதனை மறைந்திருந்த முத்துக்குமார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பாரதியை கையும் களவுமாக பிடித்து தடாகம் போலீசில் ஒப்படைத்தனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.