மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை இல்லாததால் மனைவியை கொலை... கணவன் சிக்கியது எப்படி.? காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்.!
விருதுநகர் மாவட்டத்தில் திட்டமிட்டு மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய நபர் காவல்துறை கைது செய்திருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் கட்டாலங்குளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் பழனி(27) என்பவருக்கும் பனைக்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள் முத்துவள்ளி (24) என்ற பெண்ணுக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் கணவருடன் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டில் இருந்திருக்கிறார் முத்துவள்ளி. இதனைத் தொடர்ந்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரிடமும் சமாதானம் ஏற்பட்டு பழனியுடன் சென்று இருக்கிறார் முத்துவள்ளி. கடந்த ஜூன் 30-ம் தேதி மனைவியின் அக்காவை தொடர்பு கொண்ட பழனி முத்துவள்ளி இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பழனிக்கு எதிராக காவல்துறையில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் முத்துவள்ளியின் உடலை கைப்பற்றி காவல் துறை சோதனை நடத்தியதில் அவரது கழுத்து நெஞ்சு முகம் போன்ற இடங்களில் காயங்கள் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பழனியை கைது செய்து காவல்துறை நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார. இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.