திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முடிவு சசிகலா கையில்.! ஹெச் ராஜா அளித்த பரபரப்பு பேட்டி.!
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, முழுமையாக குணமடைந்து நேற்று சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஒருவாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். ஒருவாரத்திற்கு பிறகு சசிகலா தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா விடுதலையாகி உள்ளதால், இனி அவர் சுதந்திரப் பறவையாக மாறிவிட்டார் என்று, பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா இனி முடிவுகளை அவரே எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.