பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
டி-ஷர்ட், பேண்ட்டுடன் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கிடந்த மனித எலும்புக்கூடு.! அதிர்ச்சியில் மக்கள்.! போலீசார் விசாரணை!!
கூடுவாஞ்சேரி அருகே ஏரிக்கரை ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள முட்புதரில் எலும்புக்கூடு ஒன்று துண்டு துண்டாக கிடந்துள்ளது. அதாவது நபர் ஒருவரின் தலை, கை எலும்புகள், கால் எலும்புகள் என தனித்தனியாக கிடந்துள்ளது. இதனை அப்பக்கம் வழியே சென்றவர்கள் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் எலும்பு துண்டுகள் அனைத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த எலும்புக்கூட்டுடன் கருப்பு நிற டி-ஷர்ட், பேண்ட் மற்றும் ஷூ போன்றவையும் கிடந்துள்ளது.
மேலும் அந்த நபர் இறந்து பல நாட்களாகி இருக்கலாம் எனவும், அந்த நபர் கடத்திவந்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இந்தநிலையில் போலீசார் அந்த பகுதிகளில் மாயமானவர்கள் குறித்த விவரங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.