மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவில் அருகே பிளாஸ்டிக் பைகளில் மனித எலும்புக்கூடுகள்.. பொதுமக்கள் அச்சம்.!
கோவை அருகே பிளாஸ்டிக் பைகளில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மனித எலும்புகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அங்கு கிடந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகள் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் இது குறித்து அருகில் இருந்தவர்களிடமும், சிசிடிவி காட்சி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்தனர்.
மேலும் இந்த எலும்புக்கூடுகள் மருத்துவ மாணவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்ததா அல்லது கொலை சம்பவம் ஏதேனும் நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.