மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! விடாது பெய்த மழையால் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி..!
ஈரோடு மாவட்டம் அச்சலூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் தனது வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்த போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த சுவரானது கனமழையின் காரணமாக மழையில் ஊறிப் போய் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த முதியவர் முனுசாமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கனமழையால் சுவர் இடிந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.