#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே! திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளை மரணம்.. போலீஸ் விசாரணை..!
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் யுவன் சங்கர் - நவீனா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருவள்ளூர் மாவட்டம் பரேஸ்புரம் கிராமத்தில் வசித்து வரும் கோபி என்பவரின் முயல் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று அதிகாலை யுவன்சங்கர் மனைவியுடன் ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் யுவன்சங்கர் குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கிருந்த தரைகிணற்றில் நிலை தடுமாறி யுவன்சங்கர் விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து யுவன்சங்கரின் மனைவி மீனா கூச்சலிடவே முயல் பண்ணையில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அங்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் விழுந்தவரை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் யுவன்சங்கரை சடலமாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.