மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! தாய் வீட்டிற்கு கோபித்து கொண்டு சென்ற மனைவி.. ஆத்திரத்தில் கிரிக்கெட் மட்டையால் மாமனார் மாமியாரை தாக்கிய மருமகன்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சுக்கிரன் தனது மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுக்கிரன் அவரது மனைவி லட்சுமி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டைபோட்டு தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல வேலை முடித்து வீடு திரும்பிய சுக்கிரன் அவரது மனைவி லட்சுமியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லட்சுமி கோபித்து கொண்டு மேப்புலியூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து சுக்கிரன் அவரது மனைவி லட்சுமியை அழைத்து வருவதற்காக தன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லட்சுமி சுக்கிரனோடு போக விருப்பமில்லை என்று தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சுக்கிரன் தனது மாமனார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமியார் பாசமலர் ஆகியோரை கிரிக்கெட் மட்டையால் அடித்துள்ளார். மேலும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து லட்சுமியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவலர் சுக்கிரன் மீது 5 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போக்குவரத்து காவலரான சுக்கிரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின் படி காவலர் சுக்கிரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மாமனார் மாமியாரை மருமகன் கிரிக்கெட் மட்டையால் அடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.