#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்த காதல் கணவன்.. அடுத்து நிகழ்ந்த சோகம்!
திண்டுக்கல் அருகே கர்ப்பிணி மனைவியை, கணவன் எட்டி உதைத்த சம்பவத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேம்பார்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் நத்தம் கல்வேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான வளர்மதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வளர்மதி தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் திண்டுக்கலில் இருந்து பொன்னமராவதிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாண்டியன் கடும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது பேருந்து கணவாய் பட்டி ஒத்தக்கடை அருகே சென்று கொண்டிருந்தபோது, பாண்டியன் தனது மனைவியை காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் வளர்மதி நிலை தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து பேருந்தின் பாண்டியன் பெருந்தின் முன் பகுதிக்கு சென்று ஓட்டுனரிடம் தனது மனைவியை நான் கீழே தள்ளி விட்டு விட்டேன். பிரிந்து நிறுத்துங்கள் என கூறிய பிறகு ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த வளர்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.