மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவி... மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்... உடந்தையாக இருந்த உறவினரும் கைது.!
தர்மபுரி மாவட்டத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தன்ராஜ் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சரவணன்(51) இவரது மனைவி ஈஸ்வரி(45). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
சரவணனின் மனைவி ஈஸ்வரிக்கு கிட்னி பாதிப்பு இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரை தொல்லையாகவே கருதி வந்திருக்கிறார் சரவணன். இந்நிலையில் தனது உறவினரான பச்சையப்பன்(50) என்பவருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார் சரவணன். அவர்களது திட்டப்படி நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடினர்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த அவரது மகன் நவீன் குமார் தாய் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு ஈஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நவீன் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கோடு போலீசார் விசாரித்து, சரவணன், பச்சையப்பன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.