#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹனிமூன் சென்ற இடத்தில், கணவன் செய்த விபரீத காரியம்! புதுமனைவியின் கண்முன்னே கதறிதுடிக்க நேர்ந்த பயங்கரம்!
சென்னை அமைந்தகரை பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அரவிந்த்.இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அரவிந்துக்கு அதே பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணமாகி ஒரு வாரமே ஆனநிலையில் அந்த ஜோடியினர் சமீபத்தில் இமாச்சல பிரதேசம் மணாலிக்கு சென்றுள்ளனர். அங்கு பாராசூட்டில் பயிற்சி பெற்ற ஒருவருடன் பறக்கும் பாராகிளைடிங் மிகவும் பிரபலமான ஒன்று.இந்நிலையில் மிகவும் திரில்லாக இருக்கும் அந்த பாராகிளைடிங் விளையாட அரவிந்த் சென்றுள்ளார். இந்நிலையில் ப்ரீத்தி அதெல்லாம் வேண்டாம் என கூறி அவரை தடுத்துள்ளார்.
இருப்பினும் பிடிவாதமாக அரவிந்த் பாராகிளைடிங் சென்றுள்ளார். அப்பொழுது ப்ரீத்தி கீழே நின்று அவரை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று பாரசூட்தடுமாற அரவிந்த் மேலே இருந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் சுதாகரித்து அரவிந்தை மீட்பதற்குள் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பாராசூட் விமானியும் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது கண்முன்னே கணவர் கீழே விழுந்து உயிரிழந்ததை கண்ட ப்ரீத்தி கதறி அழுதுள்ளார். மேலும் போலீசார் பாதுகாப்பு பெல்ட்டை சரியாக அணியவில்லை அதனாலேயே அவர் கீழே விழுந்துள்ளார் என தெரிவித்துள்ளனர் இந்நிலையில் அரவிந்தின் உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர்கள் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.