மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கேறிய போதை! மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்! பரிதாபமாக போன 2 உயிர்கள்!
காஞ்சீபுரம் எண்ணெய்க்கார தெருவைச் சேர்ந்தவர் தேவிபிரசாத். 47 வயது நிரம்பிய இவர் கார் டிரைவராக இருந்துள்ளார். இவருடைய மனைவி சரஸ்வதி அதே தெருவில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான தேவிபிரசாத் தினமும் மது போதையில் மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டு வேலைக்கு செல்லும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு தினம் தினம் சண்டை போட்டுள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த தேவிபிரசாத், ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவி சரஸ்வதியை தாக்கியுள்ளார். பின்னர் சரஸ்வதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
மனைவி இறந்ததையடுத்து சமையலறைக்கு சென்ற தேவிபிரசாத் அங்கு மின்விசிறிக்கான கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.