மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பர் இல்லாத நேரத்தில் நண்பனின் மனைவியை வீட்டுக்கு சந்திக்க வந்த நபர்! இறுதியில் நேர்ந்த கொடூரம்!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர் லாரி ஓட்டுநராக இருந்துள்ளார். அவர் அப்பகுதியை சேர்ந்த கெளரி பெண்ணை காதலித்து நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளது.
இந்தநிலையில் சுரேஷ் மற்றும் கெளரி இருவரும் வீட்டில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை, சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அவர்களது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததை அடுத்து, அவர்களை உறவினர்கள் தேடிச் சென்றனர்.
அவர்கள் மூவரும் தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கெளரியும், அவர்களது மகனும் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். சுரேஷ் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இடத்தில் இருந்து கத்தி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து விசாரணையில் சுரேஷின் நண்பரான வீரக்குமாரும், கெளரியும் சகஜமாக பேசி பழகியதாகக் கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டில் இல்லாத போது கெளரியை சந்திக்க வீரக்குமார் சென்றதாகவும் கூறப்பட்டது.
இதனால் நடத்தை மீது சந்தேகம் அடைந்த சுரேஷ், மனைவியையும் குழந்தையையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு தனது கழுத்தை அறுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.