மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் மீது தீராத சந்தேகம்.. இறுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம்.!
வேலூர் அருகே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கீழ் ஆலத்தூர் அருகே உள்ள சின்னநாகல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - தீபா தம்பதியினர். இதில் கிருஷ்ணமூர்த்தி மேஸ்திரியாக வேலை செய்து வந்த நிலையில் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகில் இருந்த கட்டையால் தீபாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மனைவி தீபா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து கணவர் கிருஷ்ணமூர்த்தி அருகில் இருந்த கயிற்றை எடுத்து தீபாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.