திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவி மீது தீராத சந்தேகம்.. கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்!
கிருஷ்ணகிரி அருகே மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன்-பாரதி தம்பதியினர். கூலி தொழிலாளியான இவர்கள் பூ வியாபாரம் மற்றும் கூழ் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இவர்களுடன் மகேந்திரனின் தாய் பத்தம்மாவும் வசித்து வந்துள்ளார். இதில், மனைவியின் மீது சந்தேகம் அடைந்த மகேந்திரன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகேந்திரன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பாரதியின் உள்ளே கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மகேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் சுற்றித்திரிந்த மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.