மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொல்பேச்சை கேட்காததால் மனைவி மீது அம்மிக் கல்லை போட்டுக் கொன்ற கணவன்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் ராமர் - சின்னப்பிள்ளை தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் சின்னப் பிள்ளையின் பெற்றோர் பெயரில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை பிரித்து கொள்வதில் தகராறு இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக சின்னப்பிள்ளை தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சின்னப் பிள்ளையின் தாய் செல்லம்மா காலமானார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு செல்ல இராமர் அனுமதிக்கவில்லை. ஆனால் இதனையும் மீறி சின்னப்பிள்ளை அங்கு சென்று வந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சின்னப்பிள்ளை இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, ராமர் அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார். இதில் சின்ன பிள்ளை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்தா சின்ன சேலம் போலீசார் சின்ன பிள்ளையில் தலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.