மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி மீது தீராத சந்தேகம்.. கணவன் செய்த கொடூர செயல்!
திருவண்ணாமலை அருகே கணவன், மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சதீஷ்-ரேவதி. இந்த தம்பதியினருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், ரேவதி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சதீஷ், ரேவதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ரேவதி வழக்கம் போல் வேலைக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சதீஷ் ரேவதியை பின்னால் இருந்து எட்டி உதைத்து, இரும்பு சுத்தியால் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேவதி ரத்தம் வடிந்த நிலையில் சரிந்து கீழே விழுந்தார்.
இதனிடையே அருகில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதில் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பின்னர் ரேவதியை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ரேவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ரேவதியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியான சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும், ரேவதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.