மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீ என்ன டி சாவுரது நான் உன்னைய என்ன பண்றேன் பாரு... குடிபோதையில் கணவர் செய்த வெறி செயல்!!
சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2 வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் - பபிதா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பபிதா கடந்த 31 ஆம் தேதி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நந்தகுமார் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது அருந்தியுள்ளார்.
அடுத்த நாள் அதாவது ஜனவரி 1 ஆம் தேதி தந்தை வீட்டிலிருந்து வந்த பபிதா வீடு இருப்பதை பார்த்து கணவரிடம் கோபப்பட்டு சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் உன் கூட வாழ பிடிக்க வில்லை என்று பபிதா தற்கொலைக்கு முயற்சி செய்ய முயன்றுள்ளார்.
உடனே நந்தகுமார் நீ என்ன டி சாவுரது என்று மனைவியை புடவையால் கழுத்தை நெரித்து மெத்தை மீது தள்ளி விட்டு போதையில் நந்தகுமார் உறங்க சென்றுள்ளார். அடுத்த நாள் காலை வந்து பார்த்த போது பபிதா பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.
உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் நந்தகுமார், பபிதாவின் பெற்றோரிடம் மயக்கம் போட்டு கிடந்துள்ளதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று போது இறந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் நந்தகுமார் மீது சந்தேகமடைந்த பபிதாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசார் நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் நந்தகுமார் பபிதாவை கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார். அதனையடுத்து போலீசார் நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.