மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரடைப்பால் உயிரிழந்த மனைவி..! மனைவியின் பிரிவால் கணவன் எடுத்த விபரீத முடிவு.!
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் தம்புசாமி - பவானி தம்பதி. பவானி நேற்று உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது பவானி திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக பவானியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பவானியின் கணவர் தம்புசாமிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தனது மனைவி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தம்புசாமி, நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தம்புசாமியின் சடலத்தை மீட்டு, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த விரக்தியில் கணவனும் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.