மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவிக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிகோடு பகுதியை சேர்ந்தவர் பெல்லார்மின். பொறியாளரான இவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மனைவி திவ்யாவுக்கு உப்மாவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்து, தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே மனைவியைக் கொன்ற வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அன்றைய தினம் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட படி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த தக்கலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குடும்பத்தாரிடம் விசாரணை செய்ததில் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மனைவியை கொலை செய்த வழக்கில் பயந்து கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.