#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உன்னைய நம்பிதானே வீட்டுக்குள்ள விட்டேன் இப்படி பண்ணிட்டியே.. வேலைக்கு சென்ற இடத்தில் கைவரிசை காட்டிய இளம் பெண்.!
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது வயதான பெற்றோரை பார்த்து கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்பவரை வேலைக்கு வைத்துள்ளார்.
மேலும் கனிமொழி திருமணமாகி கணவரை விட்டு விலகி தனியாக வாழ்ந்து வந்துள்ளார் என்பதால் கனிமொழி கண்ணனின் பெற்றோரை கவனித்து கொண்டு அவர்கள் இல்லதிலே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் 12 சவரன் நகை காணாமல் போனது. இதனால் கனிமொழி மீது சந்தேகம் கொண்ட கண்ணன் நாமகிரிபேட்டை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கனிமொழியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கனிமொழி கணவரை விட்டு விலகியதும் தஞ்சாவூரை சேர்ந்த மோகன் என்பவருடன் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் முதியவர்கள் வீட்டில் திருடிய 12 சவரன் நகையை மோகனிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து காவல் துறையினர் மோகனை கண்டுபிடித்து அவரிடம் இருந்த 12 சவரன் நகையை மீட்டு கண்ணனிடம் ஒப்படைத்தனர். பின்னர் கனிமொழி மற்றும் மோகனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.