திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கலெக்டர் மாப்பிளை கேட்ட வித்தியாசமான வரதட்சணை..! ஒருவழியா நடந்த திருமணம்.!
தனக்கு மனைவியாக வருபவர் தனது கிராமத்திற்கும், சுற்றுப்புற கிராமத்திற்கும் இலவசமாக சிகிச்சை பார்க்கும் மருத்துவராக இருக்கவேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறி, அதன்படி திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவர் தற்போது நெல்லை மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு டாக்டர் மனைவிதான் வேண்டுமென்றும், அதுவும் தனது கிராமத்தைச் சுற்றியுள்ள ஊர் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பவராக இருக்க வேண்டும் என்றும் பெற்றோரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சிவகுரு பிரபாகரன் கேட்டதுபோல் பெண் அமையாததால் அவரது திருமணம் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் சென்னை நந்தனம் அரசுக் கல்லூரி பேராசிரியரின் மகளான டாக்டர் கிருஷ்ணபாரதி என்பவர் சிவகுரு பிரபாகரன் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் திருமணம் சமீபாத்தில் நடந்துள்ளது. தனக்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்றும், தனது மனைவி அனைவர்க்கும் இலவச சிகிச்சை வழங்குவதே தனக்கான வரதட்சணை எனவும் கூறி சிவகுரு பிரபாகரன் திருமணம் செய்துகொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.