திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தகாத உறவை முறித்ததால் காதலியின் குழந்தைகளை கொன்ற கள்ளக்காதலன்!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முண்டாசுப்பறவடை கிராமத்து சேர்ந்த தம்பதியினர் பாலகிருஷ்ணன் - பிரியா. இந்த தம்பதியினருக்கு தர்ஷன் மற்றும் யஸ்வந்த் என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் பிரியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தனது தவறை உணர்ந்த பிரியா இனிமேல் குழந்தைகளுக்கான வாழ வேண்டும் என்று வெங்கடேசனிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் வெங்கடேசன், பிரியாவை உல்லாசத்திற்கு வருமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்ததால், ஆத்திரமடைந்த வெங்கடேசன் என்னுடன் நீ உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் உனது குழந்தைகளை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று பிரியா வீட்டிற்கு சென்ற வெங்கடேசன், வீட்டில் இருந்த இரு குழந்தைகளையும் யாருக்கும் தெரியாமல் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். அதன் பின்னர் ஊருக்கு சென்றதும் இரண்டு குழந்தைகளையும் யாரோ முகமூடி அடைந்த வட மாநில இளைஞர்கள் கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனுடைய போலீசார் நடத்திய விசாரணையில் பிரியா உல்லாசத்திற்கு மறுத்ததால், வெங்கடேசன் குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உல்லாசத்திற்கு ஒத்துக்காததால் காதலியின் குழந்தைகளை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.