மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பத் தகராறில் தெருவில் நின்று திட்டிய கணவர்.. அவமானத்தில் மனைவி எடுத்து விபரீத முடிவு..!
போரூர் ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர்கள் கார்த்திக் - விமலா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் விமலா தனது கணவருடன் கோபித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து சபரிமலைக்கு மாலை அணிவித்துள்ள கார்த்திக் நேற்று மாமியார் வீட்டிற்குச் சென்று மனைவியை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
ஆனால் விமலா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே கணவன் மனைவி இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது மாமியார் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் நின்றவாறு தனது மனைவியை கடுமையாக திட்டியுள்ளார். குடும்ப பிரச்சனையை வீதி வரை கொண்டு சென்ற தனது கணவரின் செயல்களை நினைத்து விரக்தி அடைந்த விமலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து விமலாவை மீட்ட உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு விமலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திகை கைது செய்துள்ளனர். மேலும் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.