ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு நேர்ந்த சோகம்.. சாலையை கடக்கும்போது கார் மோதி துயரம்.. பரிதாப பலி.!



in Andhra Pradesh a Ice Cream Vendor Died  

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 50). சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது, பணிக்காக அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.

நேற்று வழக்கம்போல பணிக்கு சென்றவர், இரவு நேரத்தில் மெரினாவில் உள்ள கடற்கரை விளக்கு பகுதியில், காமராஜர் சாலையில் நடந்து வந்தார். சாலையை அவர் கடக்க முற்பட்டபோது, திடீரென குறுக்கே வந்த கார், ரமேஷின் மீது மோதி இருக்கிறது.

Andhra Pradesh

இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர், இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அலறினார். அவரை மீட்ட பொதுமக்கள், உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் ரமேஷின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 9 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 13 வயது சிறுவன்.. சென்னையில் அதிர்ச்சி.! 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் காவல்துறையினர், விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த சாம் சிவானந்தம் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சிகிரெட்டுக்கு பற்றவைத்த தீ இளைஞரின் உயிர்பறித்த சோகம்.. போதையிலேயே மூச்சுத்திணறி பிரிந்த உயிர்.!