#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாமல்லபுரம்: விபத்தில் உயிரிழந்த காதலி, அடுத்த நொடியே பேருந்து முன் பாய்ந்து காதலனும் தற்கொலை..!
திரைப்பட பாணியில் காதல் ஜோடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர்கள் சபரீனா (வயது 20), யோகேஸ்வரன் (வயது 19). இவர்கள் இருவரும் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் என கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று காலை காதல் ஜோடி மாமல்லபுரம் நோக்கி பயணம் செய்தது. இவர்களின் வாகனம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது, முன்னால் புதுச்சேரி மாநில அரசுப்பேருந்து சென்னை நோக்கி பயணம் செய்தது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து ஒரே இடத்தில் நடந்த விபத்து.. தாய், தந்தை, மகன் விபத்தில் பலி.. நிர்கதியாய் 2 மகன்கள்.. உதவி கேட்டு கோரிக்கை.!
காதலியின் மரணத்தை தொடர்ந்து காதலனும் தற்கொலை
இந்த பேருந்தை யோகேஸ்வரன் முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி சபரீனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அவசர ஊர்தி குழுவினர் சபரீனாவின் மரணத்தை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, காதலி உயிரிழந்த துக்கத்தில் யோகேஸ்வரன் எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்து முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். எதிர்பாராத விதமாக அவர் பேருந்து முன்பு பாய்ந்ததால், அவர் பரிதாபமாக வாகனத்தில் மோதி உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் விழிப்புணர்வு; "தலைக்கவசம் அணியுங்க" - துக்கத்திலும் சமூக சேவையில் உறவினர்கள்.!