ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
சென்னை: தாய்-மகளை முட்டிதூக்கிய பசு.. பதறவைக்கும் காட்சிகள்.. குழந்தையை காக்க போராடிய தாய்.!

சாலையோரம் நடந்து சென்ற தாய் - மகளை மாடு தாக்கிய காணொளி வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள கொளத்தூர், பாலாஜி நகர் பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிக்கு சிறுவயது மகள் இருக்கிறார். நேற்று (14 மார்ச் 2025) காலை நேரத்தில், சுமார் 7 மணியளவில், பெண்மணி தனது மகளுடன் வீதியில் நடந்து வந்துகொண்டு இருந்தார்.
அப்போது, சாலையோரம் பசுமாடு ஒன்று இருந்த நிலையில், அதனை கவனித்த பெண்மணி, மாடு முட்ட வருவதுபோல இருந்ததால், மகளை கையில் பிடித்தவாறு எதிர்திசைக்கு சென்றார். ஆனால், தாய்-மகளை நோட்டமிட்ட மாடு, இருவரையும் தாக்கியது.
இதையும் படிங்க: மருமகளிடம் பாலியல் அத்துமீறல்.. மாமியாருடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்திய கண்ணகி.!
சென்னை , கொளத்தூர்: சாலையில் குழந்தையுடன் நடந்துசென்ற பெண்ணை முட்டி, தூக்கி வீசிய பசு மாடு
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 15, 2025
#kolathur #Cowattack #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/LW7rSwJl2k
தாக்கி விரட்டி அடிப்பு
தாய் தனது மகளை காப்பாற்ற, பத்திரமாக அவரை மறைத்து வைத்துக்கொண்டார். இதனால் மாடு தாயை தாக்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தாய் - மகளை தாக்கிய பசுமாடை கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாக்கி விரட்டி அடித்தனர்.
பின் இந்த விஷயம் குறித்து மண்டலம் 7 மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பசு மாடை பிடித்தனர். அதன் உரிமையாளர் யார்? எனவும் விசாரணை நடந்து வருகிறது.
வீடியோ நன்றிநியூஸ்18 தொலைக்காட்சி
இதையும் படிங்க: ரவுடி ராஜாவை சுற்றிவளைத்து கொடூர கொலை செய்த கும்பல்; சென்னையில் பரபரப்பு.!