தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
தண்ணீர் லாரி மோதி தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு; அதிவேகம், தலைக்கவசம் அணியாததால் சோகம்.!
சென்னையில் உள்ள மணலி விரைவுச் சாலையில், கனரக வாகனங்கள் எப்போதும் அதிகம் இயக்கப்படும். தீபாவளி விடுமுறை இருந்தாலும், மிதமான அளவு வாகன போக்குவரத்து என்பது அங்கு தொடர்ந்து. இன்று தண்ணீர் லாரி ஒன்று எம்.எப்.எல் பகுதியில் இருந்து எண்ணூர் நோக்கி பயணம் செய்தது.
தலைநசுங்கி மரணம்
அப்போது, இருசக்கர வாகனத்தில் இரண்டு நண்பர்கள் தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்தபோது, லாரி மோதியதில் ஒரு இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்தார். மற்றொரு நபர் காயத்துடன் உயிர்தப்பி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: "ஏன் இரங்கல் தெரிவிக்கல?" - விஜயை வார்த்தைகளால் வறுத்தெடுத்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்.!
காவல்துறையினர் விசாரணை
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞரின் தலையில் சக்கரம் ஏறி-இறங்கியது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள், நண்பர்கள் கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிரிழந்தவரின் விபரம் சேகரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக முதல் மாநாடு.. விபத்து, மாரடைப்பில் பலியான உயிர்கள்..!