வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
குழந்தைகள் தான் டார்கெட்... கோவிலில் கைவரிசை காண்பித்த கேடி லேடி கைது.!
கோவிலுக்கு மாலை அணிவித்து பக்தி மான் போல தோற்றமளிக்கும் கேடி லேடி, குழந்தைகளை குறித்து தங்க ஆபரணங்களை திருடி வந்தது அம்பலமானது.
சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் குமார் (வயது 46). கடந்த டிச.13ம் தேதி குடும்பத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றுள்ளார். குடும்பத்தோடு அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவில் வளாகத்தில் அமர்ந்து இருந்தனர்.
அச்சமயம், மகேஷ் குமாரின் குழந்தையுடைய காலில் இருந்த 1 சவரன் தங்க கொலுசு மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ந்துபோன மகேஷ், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக காவல்துறை? சென்னையில் தாய் கண்ணீர் குமுறல்..!
கொலுசு மாயம்
புகாரை ஏற்ற காவல்துறையினர், கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தையிடம் பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் பேச்சுக்கொடுத்து கொலுசு திருடியது தெரியவந்தது.
கேடி-லேடி கைது
இதனையடுத்து, சிசிடிவி பதிவுகளை வைத்து ஆய்வு செய்து, கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வரும் கலைவாணி (வயது 59) என்ற பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் குழந்தைகளை நோட்டமிட்டு திருட்டு செயலை அரங்கேற்றியது அம்பலமானது.
கைது செய்யப்பட்ட கலைவாணியிடம் இருந்து ஒரு சவரன் தங்க கொலுசு மீட்கப்பட்டது. கைது நடவடிக்கைக்கு பின்னர் கலைவாணி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: நண்பனை கொன்று ஆற்றில் புதைத்த பயங்கரம்.. 4 மாதமாக கபட நாடகம்.. விழுப்புரத்தில் பயங்கரம்.!