சென்னை: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த விவகாரம்; படுகாயமடைந்தவர் பரிதாப பலி.!



in Chennai RK Nagar Man Died suicide Attempt Infront of Police Station 

ஆர்.கே நகரில் காவல் நிலையம் முன் தீக்குளித்து, மரண வாக்குமூலம் பதிவு செய்த நபர், மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள புளியந்தோப்பு, திரு வி.க நகர், ஏழாவது தெருவில் வசித்து வருபவர் ராஜன் (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில், ஆர்.கே நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றார். அங்கு காவலர்கள் தனது புகாரை வாங்கவில்லை, தன்னை அடித்து துன்புறுத்துகிறார்கள், விரட்டியடிக்கிறார்கள் என காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி உடலில் தீவைத்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்த ராஜன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராஜனுக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் இருப்பதும், இவர் கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகரில் இரும்பு பட்டறை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. 

இதையும் படிங்க: #Breaking: அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரனுக்கு வலிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

தாக்குதல் சம்பவம்

தொழில் நஷ்டம் காரணமாக வேறொரு நிறுவனத்தில் அவர் கூலித் தோஇல்லையாக வேலை பார்த்து வருகிறார். அங்கு உடன் பணியாற்றி வரும் மாதவன் என்பவர், ராஜனை அவமதித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு உண்டாகி இருக்கிறது. சம்பவத்தன்று மாதவன், தனது நண்பர் அருண்குமாரை அழைத்து வந்து ராஜனை தாக்கி இருக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பாக புகார் அளிக்க வந்தபோது, அதிகாரிகள் ராஜனை புகாரை எழுதி கொடுக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் செய்வதறியாது வேதனையின் உச்சத்தில் அவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ராஜனின் தற்கொலை சம்பவத்திற்கு பின்னர் அருண்குமாரை கைது செய்த அதிகாரிகள், மாதவனை தேடி வருகின்றனர். ராஜனும் நீதிமன்ற நடுவரிடம் மரண வாக்குமூலம் பதிவு செய்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையும் படிங்க: ஓ.பி.எஸ் அணி நிர்வாகிக்கு போனில் ஆபாச அர்ச்சனை; உட்கட்சி பிரச்சனையில் இரவுகளில் தொடரும் அவலம்.. புலம்பும் புள்ளி.!