துப்புரவு பணியாளரின் நேர்மை.. நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு.!



in chennai Royapettah Sanitary Worker Honesty

 

சென்னையில் உள்ள ராயப்பேட்டை, அரசு மருத்துவமனையில், புறநோயாளியாக பெண் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கு வந்திருந்தார். இவர் தனது ஒன்றரை சவரன் மதிப்புள்ள தங்க செயினை தவறவிட்டார்.

தினமும் பலநூறு மக்கள் வந்து செல்லும் இடத்தில், சங்கிலி எப்படி கிடைக்கும்? என கவலையுடன் அவர் ஆழ்ந்து இருந்தார். மேலும், மருத்துவமனை வளாகத்திலும் தேடி பார்த்து இருக்கிறார். 

இதையும் படிங்க: சென்னை: ரௌடி குணா காவல்துறையினரால் அதிரடி கைது.! விபரம் உள்ளே.!

chennai

நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்

பெண்ணின் கைகளில் நகை சிக்காத நிலையில், அங்கு துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த நஜ்மா என்ற பெண்ணின் கையில் நகை கிடைத்தது. அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் நகையை ஒப்படைத்தார். 

துப்புரவு பணியாளரின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: கார் - கண்டைனர் லாரி மோதி சோகம்; 2 கல்லூரி மாணவர்கள் பலி.!