படிப்பு சொல்லிக்கொடுத்த பள்ளியிலேயே கைவைத்த திருட்டு இளைஞர்கள்.. 2 பேர் கைது.!



in Chennai Semmanjeri Govt School Iron Pad Theft 

 

சென்னையில் உள்ள செம்மஞ்சேரியில், அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டுமான பணிகளுக்காக இரும்பு சென்டரின் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இரவு காவலாளி பள்ளிக்கு இல்லை என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அம்பத்தூர்: 4 பேர் கும்பலால் பயங்கரம்.. பேட்மிட்டன் பயிற்சியாளர் சரமாரியாக வெட்டிக்கொலை.!

காவல் துறையினர் விசாரணை

இதனிடையே, கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக இரவு நேரத்தில் 5 சென்டரிங் பலகைகள் திருடப்பட்டு. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

chennai

புகாரை ஏற்ற காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, 15 வயதுடைய இரண்டு சிறார்கள், இரும்பு பலகையை திருடி சென்றதை உறுதி செய்தனர். 

அவர்கள் யார் என விசாரித்தபோது, அதே பள்ளியில் 5ம் வகுப்பு வரை பயின்று, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நபர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: ரௌடியை கொன்றது ஏன்? 5 ஆண்டு பகைக்கு பழிதீர்த்து முற்றுப்புள்ளி வைத்த பயங்கரம்.! கத்தி எடுத்து கத்தியால் அழிந்த துயரம்.!