ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
காவலர்கள் கண்முன் நடந்த கொலை; தாம்பரத்தில் பரபரப்பு.. வழக்கறிஞர், சட்டக்கல்லூரி மாணவர் கைது.!

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை விசாரணையின்போதே, அதிகாரிகள் முன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன் (வயது 59). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஆவார். அதற்கான மருத்துவ சிகிச்சையையும் பெற்று வந்தவர், அவ்வப்போது வீட்டில் இருந்து வெளியேறி உள்ளூரில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பின் அவரின் குடும்பத்தினர் ரங்கநாதனை மீட்டு வீட்டிற்கு அழைத்து செல்லுவார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்வு பயம் அச்சம்.. 14 வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. சென்னையில் சோகம்.!
இதனிடையே, சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறியவர், எங்கு சென்றார் என தெரியவில்லை. தாம்பரம் பகுதியில் ரங்கநாதன் சுற்றித்திரிந்துகொண்டு இருந்தார். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று அதிகாலை நேரத்தில், இரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் வாகனங்களை இடைமறித்து தகராறு செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ரங்கநாதனிடம் சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
ஆவேசத்தால் வழக்கில் சிக்கிய சோகம்
பின் அவரின் வாயிலாக மகன் முருகனின் செல்போனை பெற்று, தந்தையை வந்து அழைத்து செல்லுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது, திண்டிவனம் நோக்கி பயணம் செய்த வழக்கறிஞர்கள், தாம்பரம் பகுதியில் தண்ணீர் பாட்டில் வாங்க காரை நிறுத்தியுள்ளனர்.
இதனை கவனித்த ரங்கநாதன், வழக்கறிஞர் குழுவிடம் சென்று தகராறு செய்துள்ளார். தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். இதனால் ஆவேசமடைந்த கும்பல், ரங்கநாதனை அடித்து கீழே தள்ளியுள்ளது. இந்த சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த ரங்கநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாம்பரம் காவல்துறையினர், சைதாப்பேட்டை வழக்கறிஞர் மணிகண்டன், சட்டக்கல்லூரி மாணவர்கள் வினோத் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரூ.150 கோடி மதிப்புள்ள 90 ஏக்கர் நிலம்; முதல்வர் பிறப்பித்த உத்தரவு., துணை முதல்வர் அறிவிப்பு.!