திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரசவத்திற்கு மருத்துவமனை சென்ற பெண் பரிதாப பலி; விருத்தாசலத்தில் சோகம்.!
மூன்றாவது பிரசவத்திற்கு மருத்துவமனை சென்ற பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், படுகலாநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதிமூலம். இவரின் மனைவி ஆனந்தச்செல்வி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
மூன்றாவது பிரசவம்
இதனிடையே, சமீபத்தில் மூன்றாவது முறையாக கருத்தரித்த அந்தச்செல்விக்கு, கடந்த அக்.05ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு, விருத்தாச்சலம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 7 மாத கைக்குழந்தை என்றும் பாராது போதையில் தகப்பன் செய்த பயங்கரம்.. கேடுகெட்ட குடியால் சிறைவாசம்.!
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு, அக்.8 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வந்த நிலையில், வலி அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.
பெண் பலி
இதனால் மருத்துவர்கள் அவருக்கு ஊசி செலுத்தி இருக்கின்றனர். இதனிடையே, தீவிர உடல்நலக்குறைவை அவர் எதிர்கொண்ட காரணத்தால், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
உறவினர்களால் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்மணி, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து ஆனந்த் செல்வியின் உறவினர்கள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
இதையும் படிங்க: 20 தீட்சகர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட விசிக நிர்வாகி; சிதம்பரத்தில் பகீர்.. போராட்டம்.!