"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
10 ரூபாய் ஜூஸ் குடித்து படுத்த படுக்கையாக சிறுவன்; கடலூரில் பேரதிர்ச்சி.. அலட்சியத்தில் அதிகாரிகள்?.! தாய் குமுறல்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, மகன் இருக்கின்றனர். இதனிடையே, சிறுவன் சம்பவத்தன்று பெட்டிக்கடையில் ஜூஸ் வாங்கி குடித்துள்ளார். ஜூஸை குடித்த சிறுவன், சில நிமிடங்களில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன பெற்றோர், மகனை மீட்டு கம்மாபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவன் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத வாகனம் மோதி சோகம்; இளைஞர் பரிதாப பலி.!
சிறுவன் உடல்நலக்குறைவால் பரிதவிப்பு
கிட்டத்தட்ட 6 மணிநேரம் சிறுவன் சுயநினைவு இன்றி, அங்கிருந்து சிதம்பரம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். பின், தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதி செய்யப்பட்ட நிலையில், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு பேசியபோது, ஊடகம் & காவல்துறைக்கு செல்லவேண்டாம். நாங்கள் வந்து பார்க்கிறோம் என கூறி இருக்கிறார்கள். ஆனால், தற்போது வரை எந்த பலனும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தாய் குமுறல்
பெண்மணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தனது 2 மகன்களுடன் பெண் வசித்து வருகிறார். அவரின் மூத்த மகன் முழு ஜூஸையும் குடித்த நிலையில், மற்றொரு சிறுவன் சிறுது குடித்துவிட்டு துப்பி இருக்கிறார்.
தற்போது ஜூஸ் குடித்து பாதிக்கப்பட்டுள்ள சிறுவனை, தனியார் மருத்துவமனையில் பெண்மணி சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். ஆனால், மேல் சிகிச்சைக்காக அவர் அனுமதி செய்ய பணம் இல்லாமல் பெண்மணி தவித்து வருகிறார். முதற்கட்ட சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம்?
திடீரென மயக்கம், வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதாகவும் சிறுவன் தெரிவித்து இருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அவர் மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக சிறுவன் துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.10 க்கு வாங்கப்பட்ட ஜூஸால் இந்த வினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும், முதல் நாள் விசாரணை நடத்திவிட்டு, பின் மறுநாளில் இருந்து இவர்கள் தொடர்புகொண்டாலும் பதில் சொல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது சோகம்; 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி.!