கடலூர்: வெடிக்காத பட்டாசு மருந்தை கொளுத்தி விளையாட்டு; 4 ம் வகுப்பு சிறுவனின் முகம் கருகி சோகம்.!



in Cuddalore Panruti a Youth face Burned 

வீட்டில் இருக்கும் சிறார்களிடம் வெடி மற்றும் அதன் மருந்துகளின் வீரியம் குறித்து பெற்றோர் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, மேல்காங்கியிருப்பு கிராமத்தை சேர்ந்த 4ம் வகுப்பு சிறுவன், அங்குள்ள அரசுப்பள்ளியில் பயின்று வந்துள்ளார். சிறுவனின் பள்ளிக்கு அருகே சம்பவத்தன்று பாட்டசு வெடிக்கப்பட்டு இருக்கிறது. 

முகத்தில் தீ பரவியது

அப்போது, சில வெடிக்காத பட்டாசுகளை தன்னுடன் எடுத்து வந்த சிறுவன், பள்ளியின் திடல் பகுதியில் மருந்துகளை கொட்டி கொளுத்தி இருக்கிறார். இதனால் மளமளவென பிடித்த தீ, சிறுவனின் முகத்திலும் பட்டுள்ளது. இதில் முகம் கருகியது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி விபத்து; ஒருவர் பலி., 3 மாணவிகள் காயம்.!

இதனால் சிறுவன் வலியால் அலறித்துடிக்க, சிறுவனை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: கரும்பலகை விழுந்து 2 மாணவர்கள் தலையில் காயம்; வடலூரில் சோகம்.!