கடும் வெயிலில் தவித்த முதியவர்.. உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளம்.. குவியும் பாராட்டுக்கள்.!

மாநில தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன பயணிகளின் வசதிக்காக ஆங்காங்கே தனியார் உணவகங்கள் வைக்கப்பட்டுள்ளன. நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள், உணவகத்தில் இளைப்பாறி பின் புறப்பட்டு செல்வது வழக்கம்.
இவ்வாறான உணவகத்தில் வரும் கார்களை நிறுத்த வெயில், மழையை பாராமல் தொழிலாளி ஒருவர் பச்சை மற்றும் சிகப்பு கொடியுடன் சாலையோரம் காத்திருப்பார். ஒருசில நிறுவனங்கள் அவருக்கு தேவையான வசதியை, அதாவது பகல் நேரங்களில் குடை, இரவு நேரங்களில் குளிரை தாங்கும் உடைகள் போன்றவற்றை வழங்கி இருப்பார்கள்.
அந்த ஹைவே ஹோட்டல் உரிமையாளர் கவனத்திற்கு அவர் உங்களிடம் வேலை செய்யலாம் ஆனால் அவரும் மனிதர் தான்.. pic.twitter.com/GYA9jdVAKa
— கபிலன் (@_kabilans) March 1, 2025
இதையும் படிங்க: உங்கள் மீனவன் முதுகில் குத்திய துரோகிகள்?.. கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நபர்.. கிறுகிறுக்கவைக்கும் பரபரப்பு தகவல்கள்.!
ஆனால், ஒருசில இடங்களில் அவை கிடைப்பது இல்லை. இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி - சென்னை வழித்தடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் தனியார் உணவகம் ஒன்று செயல்படுகிறது. அந்த உணவகத்தின் தொழிலாளி ஒருவர், பகல் நேரத்தில் கடும் வெயிலில் அவ்வழியே வரும் வாகனங்களை இளைப்பாற அழைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, இதனை கவனித்த நபர் ஒருவர், முதியவர் வெயிலில் துயரடைவதை கண்டு முதியவருக்கு குடை, காதலுக்கு செருப்பு ஆகியவற்றை வாங்கி கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: நாமக்கல்: குடிக்க பணம் கொடு.. மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல்.. இளைஞர் அதிர்ச்சி செயல்.!