அம்மாவை கவனிக்க வந்த கேர்-டேக்கருடன் தனிமை.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்.!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சூசையம்மாள் (வயது 35). இவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் நளினி (வயது 32) என்பவர் பணிக்கு சேர்ந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும் நபர் மாதேஸ்வரன் (வயது 50). இவர் திருப்பத்தூர் தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் ஆவார். இவரது தாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், வேலைக்கு ஆள் கேட்டுள்ளார். நளினி சில நாட்கள் வேலைக்கு சென்றார்.
நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்
அப்போது, இருவரிடமும் பழக்கம் ஏற்படவே, மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி அதனை வீடியோ எடுத்துள்ளார். பின் அந்த வீடியோ வைத்து ரூ.5 இலட்சம் கேட்டு மிரட்டப்பட்டுள்ளது. மாதேஸ்வரன் ரூ.2.5 இலட்சம் வரை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்மபுரி தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.!
கூடுதல் பணம் கேட்டு தொல்லை தொடர்ந்ததால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் ஆம்பூர் பகுதியில் வசித்து வரும் விமலராஜ் (வயது 40) என்ற நபரை மாதேஸ்வரனின் வீட்டுக்கு அனுப்பி மிரட்டப்பட்டுள்ளது.
இதனால் மாதேஸ்வரன் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் சூசையம்மாள், நளினி, விமலராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: "கலெக்டர், எஸ்.பி எல்லாம் நான் சொல்றதைத்தான் கேட்கணும்" - திமுக மா.பொ ஆடியோ லீக்.!