கொடைக்கானல்: போதை மறுவாழ்வு மைய பழக்கம் பலிபோட்ட சோகம்.. முதியவரை கேம்ப்பயரில் தள்ளி எரியூட்டிய போதை இளைஞர்கள்.. பரிதாப பலி.!



in Dindigul Kodaikanal Man Killed 

 

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 60 வயதுடைய முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், நாயுடுபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ் (வயது 60). இவர் பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக காட்டேஜ் வைத்துள்ளார். சிவராஜுக்கு 2 மனைவிகள், 3 பிள்ளைகள் இருக்கின்றனர். போதைப்பழக்கத்துக்கு அடிமையான சிவராஜ், மதுரை அழகர்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். 

இதையும் படிங்க: குடும்ப கஷ்டத்தால் செயின் பறிப்பு.. இளைஞரின் அதிர்ச்சி செயல்.. மன்னிப்பு கடிதமும் சேர்ந்து சிக்கியது.!

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்த சிவராஜ், அவரின் சகோதரி சந்தியால் மீண்டும் கொடைக்கானலுக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டுக்கு செல்லாத சிவராஜ் தொடர்ந்து காட்டேஜில் தங்கி இருந்தார். மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது சிவராஜ், உடன் சிகிச்சைப்பெற்ற மதுரை, தத்தனேரி பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் (25), அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோரின் நட்பு ஏற்பட்டது. 

Dindigul

டீசல் ஊற்றி எரித்துக்கொலை

சிகிச்சைக்கு பின்னரும் நட்பு தொடர்ந்த நிலையில், கடந்த மார்ச் 20 அன்று, ஆறு பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியபின் சிவராஜ் பிற நபர்களிடம் சண்டையிட, ஆத்திரமடைந்தவர்கள் சிவராஜை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும், மதுபாட்டிலை உடைத்து சரமாரியாக குத்திக் கொன்றவர்கள், சிவராஜை கேம்ப்பயரில் தள்ளிவிட்டு, டீசல் ஊற்றி எரித்துக்கொலை செய்தனர்.

பகுதியளவு எரிந்த உடலை, 50 அடி பள்ளத்தில் தூக்கியெறிந்து தப்பிச்சென்றுள்ளனர். சிவராஜ் மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கவல்த்துறையினர், சிவராஜை தேடி வந்தனர். இதனிடையே, மணிகண்டன், சிவராஜின் மரணம் குறித்து தனது மறுவாழ்வு மைய அதிகாரியிடம் கூறினார். இதன்பேரில், அவர் காவல்துறையினக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் மணிகண்டனை கைது செய்தனர். 

பின் கொடைக்கானல் காவல்துறையினக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் உடல் மீட்கப்பட்ட நிலையில், தலைமறைவான பிற ஐவருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சின்னாளப்பட்டி: திருவிழாவுக்கு சென்ற 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது.!