மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேகத்தடையால் நிகழ்ந்த சோகம்; லாரி சக்கரத்தில் சிக்கி மகன், பேரன் கண்முன் தலை நசுங்கி பெண் பலி.!
லாரியின் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீலப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 52). இவரின் மகள் வீடு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருக்கிறது.
இதையும் படிங்க: காலாவதியான செய்தியாளர் ஐ.டி கார்டுடன் மசாஜ் சென்டரில் அடாவடி; இளைஞர் கும்பலை வறுத்தெடுத்த ஒரிஜினல் செய்தியாளர்கள்..!
இன்று தனது மகள் வீட்டிற்கு செல்ல முற்பட்டவர், மகன் பாலமுருகன், பேரன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
வழியில் சீலப்பாடி பகுதியில் வந்தபோது, வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியுள்ளது. அப்போது நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். அச்சமயம் லாரி ஒன்று எதிர்திசையில் வந்துள்ளது.
மூதாட்டி பரிதாப பலி
இந்நிலையில், கீழே விழுந்தவர்களில் லாரியின் சக்கரம் பாண்டியம்மாள் தலை மீது ஏறி - இறங்கியதால், அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலமுருகன் மற்றும் பேரன் ஆகியோர் செய்வதறியாது திகைத்துப்போயினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காய்ச்சலால் மூளைச்சாவடைந்த 11 வயது சிறுவன்; உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்.. திண்டுக்கலில் சோகம்.!