பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
கன்னியாகுமரி: 14 வயது சிறுமி பலாத்காரம்; அலுவலகத்தில் வழக்கறிஞரின் அதிர்ச்சி செயல்..! போக்ஸோவில் கைது.!

நள்ளிரவு நேரத்தில் வெளியே சுற்றிய அக்கா-தங்கையை வழக்கறிஞர் மிரட்டி அழைத்துச் சென்று, 14 வயது சிறுமியை வழக்கறிஞர் வன்கொடுமை செய்த பயங்கரம் தக்கலையில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து, தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இளம்பெண்ணுக்கு 14 மற்றும் 12 வயதுடைய மகள்கள் இருக்கிறார்கள். சிறுமிகள் இருவரும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இதையும் படிங்க: சந்துக்குள்ள இவ்வுளவு வேகம் தேவையா அண்ணாத்த? வாகனத்தை கரப்பாண்பூச்சி போல கவிழ்த்த நபர்.!
சிறுமிகள் பலாத்காரம்
ரப்பர் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இளம்பெண், ஒருசில நேரங்களில் இரவு நேர பணிகளுக்கு சென்றும் வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் இரவு வேலைக்குச் சென்ற பின்னர், சிறுமிகள் இருவரும் தக்கலை பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர்.
நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தெருவில் சுற்றிய சகோதரிகளை, அவ்வழியே சென்ற வழக்கறிஞர் பேசி தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு 12 வயது சிறுமியை தனி அறையில் அடைத்து வைத்தவர், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவருகிறது.
வழக்கறிஞர் போக்ஸோவில் கைது
சிறுமியை வன்கொடுமை செய்தவர், சகோதரிகளை தக்கலை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச்சென்று, மதுரை செல்லும் பேருந்தில் ஏற்றி மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். மகள்கள் காணாதது தொடர்பாக தாய் மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து, வழக்கறிஞர் அகிலேஷை கைது செய்தனர்.
மேலும், சிறுமிகள் தங்களின் கையில் ஸ்மார்ட்போன் வைத்திருந்த நிலையில், அதனை மதுரையில் வைத்து சார்ஜ் ஏற்றி ஆன் செய்தபோது அவர்களின் இருப்பிடம் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமிகளை மீட்ட காவல்துறையினர், வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 பிரிவுகளின் கீழ் வழக்கறிஞருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.150 பணத்துக்காக மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக்கொலை.. கல்லால் தாக்கி கொன்று பயங்கரம்.!