போதையில் தந்தை அடித்துக்கொலை; மனைவி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்.. நடந்தது என்ன?



in Kanyakumari Arumana SOn Kills Father 

மதுபோதையில் புதிய போதையை ஏற்றிய நபர், ராட்சதன் போல செயல்படுவதாக மனைவி பகீர் தகவலை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, அருமனை, பத்துக்காணி, பள்ளித்தரவிளை பகுதியில் வசித்து வருபவர் ரசல் (வயது 67). இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரின் மகன் மேஜோ (வயது 34), லாரி ஓட்டுநராக வேலை பார்க்கிறார். மேஜோவின் மனைவி சோபி (வயது 27). 

தம்பதிகளுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகும் நிலையில், இரண்டரை வயதுடைய குழந்தை, 6 மாத கைக்குழந்தை என 2 குழந்தைகள் இருக்கின்றனர். தந்தை-மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக இருவரும் மதுபானம் அருந்தியுள்ளனர்.

இதையும் படிங்க: "உங்க கூட பேசணும்" - இளைஞரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்; குமரியில் பகீர் சம்பவம்.!

தந்தை கொலை

அப்போது ஏற்பட்ட தகராறில் மகனால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அருமனை காவல்துறையினர், ரசலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மெஜோவை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடித்தனர். 

kanyakumari

இதனிடையே, மேஜோவின் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "எனது கணவர் போதைக்கு அடிமையான நபர் ஆவார். அவர் மதுபானம் அருந்துவதோடு மட்டுமல்லாமல், கையில் எதோ ஒரு பொருளை எடுத்து கசக்கி, அதனையும் உறிஞ்சு போதையேற்றுவார். 

போதைப்பொருள் பழக்கம்

அந்த போதைப்பொருளை பயன்படுத்தும்போது ராட்சதன் போல நடந்துகொள்வார். ஆத்திரத்தில் என்ன செய்வார் எனவும் அவருக்கு தெரியாது. சிறிய பிரச்சனை என்றாலும் கடுமையாக நடந்துகொள்வார், அடிப்பார். போதை தெளிந்தபின் நல்லவராக மாறி பண்புள்ளவராக இருப்பார். 

எப்போதும் போனில் பணம் அனுப்பிவிட்டு ஒருவரிடம் வீடியோ கால் பேசுவார். நான் யார் என்று கேட்டால் பதில் இருக்காது. மீறி கேட்டால் கடுமையான வாக்குவாதம் செய்வார்" என கூறி இருக்கிறார். இதனால் மேஜோ பயன்படுத்திய போதைப்பொருள் எந்த வகை? யாரிடம் இருந்து அதனை வாங்குகிறார்? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் பார்த்து 13 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. ஸ்மார்ட்போன் கொடுக்கும் பெற்றோரே கவனம்.!